கட்சியை பாதுகாக்க வேண்டியது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் கடமையாகும் – சுஜீவ சேனசிங்க!

கட்சியை பாதுகாக் வேண்டியது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் கடமையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயற்குழுவின் தீர்மானம் தொடர்பாக நாம் அவதானம் செலுத்தப் போவதில்லை.

அவர்கள் கூறுவதைப் போல் செயற்பட்டால் ஐ.தே.க. அழிவை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். நவீன் திசாநாயக்க மற்றும் கருஜயசூரிய உள்ளிட்ட குற்றச்சாட்டுகளற்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

வரலாற்று சிறப்புமிக்க பழமைவாய்ந்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக் வேண்டியது ஐ.தே.க. உறுப்பினர்களின் கடமையாகும். குறிப்பிட்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஒரு ஜனாதிபதியை உறுவாக்க முடியாமல் போயுள்ளது.

இதனை கருத்திற் கொண்டே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.தே.க. உறுப்பினர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சஜித் பிரேமதாசவை நாங்கள் களமிறக்கியிருந்தோம்.

இருந்த போதிலும் அவரால் வெற்றியடைய முடியாமல் போயுள்ளது. அவரது தோல்விக்கு எமது கட்சியைச் சேர்ந்த சிலரின் செயற்பாடுகளும் பிரதான காரணங்களாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தலைமைத்துவத்தை தம்வசம் தக்கவைத்துக் கொண்டே செயற்படுகின்றனார்.

26 வருடங்களாக அவரே தலைவராக இருந்து வருவதுடன் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் இடமளிக்கால் இருக்கின்றார்.

இவ்வாறான நிலைமை ஜனநாயக தன்மையற்றதாகும். தொடர்ந்தும் தோல்வியை எதிர்க்கொண்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியின் பாதைக்கு இட்டுச் செல்வதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும் அவர் இடமளிப்பதாக தோன்ற வில்லை.

தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்க கூடிய பலம்வாய்ந்த எதிர்கட்சியை உருவாக்குவதே எமது நோக்கமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.4Shares

0 Reviews

Write a Review

Read Previous

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லன் இவரா..? கசிந்த மாஸான தகவல்

Read Next

பிக்பாஸ் கவினை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! சோகத்துடன் உருக்கமான பதிவு – ரசிகர்கள் கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?