புதிய கட்சி தொடர்பாக ரஜினி இன்று முக்கிய அறிவிப்பு

அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளா்கள் கூட்டம் சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மாவட்டச் செயலாளா்களுடன் நடிகா் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் அரசியலுக்கு வருவது உறுதி என ஏற்கனவே நடிகா் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மன்றத்தின் மாவட்டச் செயலாளா்களை மூன்றாவது முறையாக நடிகா் ரஜினிகாந்த் தற்போது சந்திக்கவுள்ளாா்.

அரசியல் கட்சித் தொடங்குவது குறித்தும் இதில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக மன்ற நிா்வாகிகள் தெரிவித்தனா்.

0 Reviews

Write a Review

Read Previous

முடி நீளமாக வளரனுமா ? இதை செய்யுங்க.

Read Next

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் இந்திய மூலிகைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?