குளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…!

வானிலை மாற்றத்துடன் உங்கள் தோல் வழக்கத்தை மாற்றுவது சரியான திசையில் ஒரு படியாகும். ஆனால், நாம் வழக்கமாக அதற்கு என்ன செய்யலாம் என்றுதான் பார்க்கிறோம். எதை செய்யக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. உங்களுக்கு உகந்ததாக நீங்கள் நினைக்கும் சரும அழகு பொருட்கள், குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று தெரியுமா? . கவலையை விடுங்க… உங்களுக்கு நாங்க இங்கே சொல்லுறோம். இங்கே குளிர்காலத்தில் எந்தெந்த பொருட்களை உங்கள் சருமத்தில் பயன்படுத்தக்கூடாது என்று விளக்குகிறோ

ஆல்கஹால் சார்ந்த தயாரிப்புகள் ஆல்கஹால் உங்கள் சருமத்தை உலர வைக்கும். கடுமையான குளிர்கால வானிலையால் உங்கள் தோல் போதுமான அளவு வறண்டு காணப்படுகிறது. உங்கள் தோல் பராமரிப்புப் பொருட்களில் எந்தளவு ஆல்கஹால் உள்ளது, குறிப்பாக டோனர்கள் எவ்வளவு உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நிச்சயமாக அவை அழுக்கை நீக்கி உங்கள் சருமத்தின் பி.எச்(pH)-ஐ சமப்படுத்துகின்றன. ஆனால் குளிர்காலத்தில், ஆல்கஹால் சார்ந்த பொருட்கள் உங்கள் சருமத்திற்கு நல்லதல்ல. அந்த தயாரிப்புகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக கரிம பொருட்களை பயன்படுத்தலாம்

சோப்புகள் சோப்புக்கு பதிலாக ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதை ஒரு வேலையாக நினைக்கும் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், சோப்புகள் உங்கள் சருமத்திற்கு சரியானதல்ல. சோப்புகளில் அதிக பி.எச் உள்ளது. இது உங்கள் சருமத்தை விட அதிகம். கடுமையான சோப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தின் பி.எச் சமநிலையை சீர்குலைத்து, உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அகற்றும். அதற்கு பதிலாக முகத்தைக் கழுவ ஒரு மென்மையான ஃபேஸ் வாஷ்ஷை பயன்படுத்தலாம்.

பவுடர் மேக்-அப் சருமத்தை அழகுபடுத்த மேக்-அப்-கிரீம், பவுடர் மற்றும் ஜெல் என உலகில் தயாரிப்புகளின் வெவ்வேறு கட்டமைப்புகள் இருக்கின்றன. இவற்றில், பவுடரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது, எனவே அவற்றை அடிக்கடி நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், பவுடர் பொருட்கள் குளிர்காலத்தில் அதிகமாக உபயோகிக்க வேண்டாம். பவுடர் பொருட்கள் சருமத்தின் எண்ணெய் சுரப்பை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. பெரும்பாலும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும். வறண்ட குளிர்காலத்துடன் இணைந்து, இது உங்கள் சருமத்தை வறண்டு விடக்கூடும். எனவே, பவுடர் தயாரிப்புகளைத் தவிர்ப்பது மற்றும் கிரீம் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

0 Reviews

Write a Review

Read Previous

இரவு தூங்குவதற்கு முன்னால் உங்க முகத்தை கழுவினால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?

Read Next

வடக்கின் பெரும் போர் ஆரம்பமானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?