ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவாலாகும் – ஜனாதிபதி!


ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவாலாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘ஜெனீவா யோசனை நாட்டின் இறைமைக்கு மற்றும் அபிமானத்திற்கு சவாலாகும். தமது பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொண்ட வரலாற்றில் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இணை அனுசணையிலிருந்து விலகியதற்கான காரணம் இதுவாகும். நாம் இப்பிரச்சினையின் ஆரம்பத்திற்கு செல்ல வேண்டும். உமா மகேஷ்வரன் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்தது பொருளாதார பின்னடைவை பற்றி கூறிய வண்ணமே.

பின்னர் அந்த உண்மை நிலைமையை மறைத்து பிரிவினை வாதத்தை முன்னெடுத்தார். நாம் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்.

தாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வேலைத்திட்டங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது.

தேர்தல் காலத்தில் தனது பிரதான எதிர்தரப்பு வேட்பாளரின் பெயரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் குறிப்பிடவில்லை. எதிரான கருத்துக்களை விமர்சிக்கவில்லை.

அது சிலநேரங்களில் கின்னஸ் சாதனையாகவும் அமைந்திருக்கலாம். எனக்கு தனிநபருக்குப் பதிலாக கொள்கையே முக்கியம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமித்துள்ளது. அதன் இரண்டு இடைக்கால அறிக்கைகள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இறுதி அறிக்கை கிடைத்தவுடன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முடியும். தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையிலும் முக்கிய பல முன்மொழிவுகள் உள்ளடங்கி உள்ளன.

அவை அனைத்தையும் கருத்திற்கொள்ளவுள்ளோம். தற்போது இடம்பெறுகின்ற விசாரணை தொடர்பாக பேராயர் கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் திருப்தியடைந்துள்ளார்.

பல நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு வழங்கிய நியமனங்கள் தொடர்பாக திருப்திகொள்ள முடியும். சில நியமனங்கள் தொடர்பாக பிரச்சினை இருக்கின்றது.

உயர் பதவிகளுக்கு நியமனம் பெற்றவர்கள் குறித்த காலத்திற்குள் சிறந்த பெறுபேறுகளை காட்ட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி ஏற்படும்.

மக்கள் பிரதிநிதிகளை ஜனாதிபதி தெரிவு செய்வதில்லை. அதன் பொறுப்பு முழுமை

0 Reviews

Write a Review

Read Previous

24 மாவட்டங்களை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

Read Next

கையடக்கத் தொலைபேசியின் திரையில் கொரோனா வைரஸ் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?