கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து? மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

உலகின் 90 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படாத நிலையில், இது மேலும் பரவ வாய்ப்புள்ளதாக பிரித்தானியா கணித்துள்ளது.

இதுவரை ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா வியாதிக்கு ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக்கிவிட்டனர்.

அதை விலங்குகள் மேல் பரிசோதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அது வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவது தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கிவிட்டாலும் அதன் பிறகு அதை பெருமளவில் தயாரிக்கும் பெரிய பணி இருக்கிறது.

இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தானது அடுத்த ஆண்டு பாதியில்தான் தயார் நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால், அதிக தேவை காரணமாக இந்த தடுப்பு மருந்துகளை உருவாக்க புதிய செயல்முறையை பின்பற்றுவதால் அனைத்தும் சரியானதாக அமையும் எனவும் உறுதி கூற முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஏற்கனவே நான்கு வகையான கொரோனா வைரஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் சாதாரண சளியைதான் உருவாக்கும். ஆனால் இவை எதற்கும் தடுப்பு மருந்து இல்லை.

மட்டுமின்றி இந்த தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான வாய்ப்பு வயோதிகர்களிடம் குறைவாகவே இருக்கும்.

மேலும், வயோதிகர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு இந்த மருந்துகளை ஏற்று வினை புரியும் அளவுக்கு வலுவாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே பெரும்பாலான மக்களுக்கு கொரோனா வைரசின் பாதிப்பு லேசானதாக மட்டுமே இருக்கும் என கூரப்படுகிறது.

மேலும் வைரஸ் தொற்றை குணப்படுத்துவதற்கான சில மருந்துகள் நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அத்தகைய மருந்துகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வேலை செய்யும் என்று உறுதியாகக் கூற முடியாது எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

0 Reviews

Write a Review

Read Previous

கொரோனாவால் உலக முழுவதும் 1.5 கோடி பேர் இறப்பர் – பீதியை கிளப்பும் ஆய்வு முடிவுகள்

Read Next

கனவிலும் நினைத்திராத நிகழ்வு இது’: ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி போன மெக்கா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?