மனைவிக்கு கொரோனா – தன்னைத் தானே தனிமைப்படுத்தினார் கனேடிய பிரதமர்!

FILE PHOTO: Canada’s Prime Minister Justin Trudeau and his wife Sophie Gregoire Trudeau leave Rideau Hall after asking Governor General Julie Payette to dissolve Parliament, and mark the start of a federal election campaign in Canada, in Ottawa, Ontario, Canada, September 11, 2019. REUTERS/Patrick Doyle/File Photo

தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.

பிரதமரின் மனைவி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

தனது மனைவி மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

தனது உடல்நிலை பாதிக்கப்பட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை எனவும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனேடிய பிரதமரின் மனைவி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Reviews

Write a Review

Read Previous

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு

Read Next

கொரோனா வைரஸால் இந்தியாவில் முதலாவது உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?