ஒலிம்பிக் சுடர் கொரோனா பீதியின் மத்தியிலும் ஏற்றப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்கான ஒலிம்பிக் தீபம் தற்போது ஏற்றப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.

எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஒலிம்பிக் சுடர் அடுத்த 7 நாட்கள் கிரேக்கத்தில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும். முதல் நபராக கிரேக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அன்ன கோராககி தீபத்தை ஏந்தி வந்தார்.

குறித்த ஒலிம்பிக் ஜோதி, எதிர்வரும் 19ஆம் திகதி டோக்கியோ போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

0 Reviews

Write a Review

Read Previous

ட்ரம்பின் அறிவிப்பினைத் தொடர்ந்து – கடும் வீழ்ச்சியை சந்தித்த ஐரோப்பிய பங்குச் சந்தைகள்!

Read Next

ஐ.பி எல்.போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?