மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- அராலி வீதியில் மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 25 வயதான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அராலியை சேர்த்த சூரியகுமார் கீர்த்தனன் (வயது-25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன் நேற்றிரவு பணி முடித்து வீடு திரும்பும்போதே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 Reviews

Write a Review

Read Previous

கொரோனா வைரஸ் ஒழிப்பு – வடக்கு ஆளுநரின் அதிரடி செயற்பாடுகள்

Read Next

வவுனியாவைச் சேர்ந்த நபர் திருகோணமலையில் சடலமாக மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?