தலைமுடிக்கு ஹேர்-டை பயன்படுத்துவதால் வரக்கூடிய நோய்கள்!

இன்றைய நாட்களில் தலைமுடிக்கு டை பயன்படுத்துவது ஒரு பேஷனாகி விட்டது. ஆண் பெண் இருபாலரும் தற்போது அதிக அளவில் ஹேர் டை பயன்படுத்தி வருகின்றனர். 35% க்கு அதிகமான பெண்கள் மற்றும் 20%க்கு அதிகமான ஆண்கள் ஹேர் கலரிங் செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தற்காலிக டை, அரை நிரந்தர டை மற்றும் நிரந்தர டை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஹேர் டையில் அம்மோனியாவுடன், முடி ஃபார்மால்டிஹைட், பி-ஃபெனிலெனெடியமைன் (பிபிடி), நிலக்கரி தார், ரெசோர்சினோல் மற்றும் யூஜெனோல் ஆகியவை உள்ளன.

மேலே கூறிய ரசாயனங்கள் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களுடன் தொடர்பு உள்ளவை. இதனைப் பற்றி அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை
ஹேர் டைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பி-ஃபெனிலெனெடியமைன் சிறுநீர்ப்பை புற்றுநோய், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சரில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மாதத்திற்கு ஒரு முறை ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான ஆபத்து அதிகமாக உள்ளது. மேலும் கருப்பு மற்றும் பிரவுன் போன்ற அடர் நிறம் பயன்படுத்தும்போது இந்த ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சுவாசம் தொடர்பான பிரச்சனைகள்
ஹேர் டைகளில் ப்ளீச் உருவாக்க, ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் ரசாயனத்துடன் அம்மோனியா சேர்க்கப்படுகிறது. இந்த இரசாயனங்கள் வெளிப்பாடு காரணமாக ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம். ஏற்கனவே ஆஸ்துமா அல்லது பிற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த இரசாயனங்கள் தொடர்பினால் மோசமான அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.

ஹார்மோன் சமச்சீரின்மை
ஹேர் டைகளில் பயன்படுத்தப்படும் மற்றொரு ரசாயனம் ரெசோர்சினோல். ஐரோப்பிய சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நீண்ட காலமாகப் ஹேர் டை பயன்படுத்துவது பெண்களின் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அளவை அதிகரிப்பதாக குறிப்பிடுகிறது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக ஹேர் டை பயன்படுத்திய பெண்களில் பிளாஸ்மா மொத்த டெஸ்டோஸ்டிரோன் அளவு 14% அதிகமாக இருந்தது.

ஒவ்வாமை
ஹேர் டையில் உள்ள பி-ஃபினிலெனெடியமைன் என்ற வேதிப்பொருள் சருமத்தில் உறிஞ்சப்படுவதால் ஒவ்வாமை தொடர்பான தோல் அழற்சி ஏற்படுகிறது. காண்டாக்ட் டெர்மடிடிஸில் ஒரு ஆய்வின்படி, ஹேர் டைகளின் பயன்பாடு ஒவ்வாமை தொடர்பு தோல் அழற்சியுடன் தொடர்புடையது என்பது அறியப்படுகிறது.

கருவை சேதப்படுத்தும்
கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் ஹேர்டை பயன்படுத்துவது தாய்க்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. ட்ரைக்காலஜி இன்டர்நேஷனல் ஜர்னலில் ஒரு ஆய்வில், 96% பெண்கள் கர்ப்பம், குழந்தைக்கு பாலூட்டும் காலம் போன்ற காலகட்டத்தில் ஹேர் டை பயன்பாடு பாதுகாப்பற்றது என்று வெளிப்படுத்தியுள்ளனர்.

புற்றுநோய்
ஃபார்மால்டிஹைட், நிலக்கரி தார், ஈய அசிடேட் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் சிறுநீர்ப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களை உண்டாக்குகின்றன.

முன்னெச்சரிக்கைகள்
உங்கள் தலைமுடிக்கு ஹேர் டை பயன்படுத்தும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளாவன:
* நிரந்தர ஹேர் டை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், அதற்கு பதிலாக, அரை நிரந்தர ஹேர் டை பயன்படுத்துங்கள்.
* உங்கள் தலைமுடிக்கு டை போடுவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் நடத்துங்கள்.
* எந்த ஹேர் கலரிங் பயன்படுத்துவதற்கு முன்பும் தோல் மருத்துவரை அணுகவும்.

0 Reviews

Write a Review

Read Previous

பிக்பாஸ் 4 – இத்தனை ஹீரோயின்களா!

Read Next

இந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?