விடுதி ஒன்றிலிருந்து ஜோடி கைது; சட்டத்துக்கு புறம்பாக சிசுவை அகற்றி புதைத்தனர் – இணுவிலில் சம்பவம்

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இணுவில் – மருதனார்மடத்தில் உள்ள விநாயகர் விடுதிக்குச் சென்ற பொலிஸார், இருவரையும் கைது செய்தனர்.

கொக்குவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும் உடுவிலைச் சேர்ந்த 20 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அந்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது பெண் கருவுற்று சில மாதங்களாகிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் சட்டத்துக்குப் புறம்பாக சிசு அகற்றப்பட்டுள்ளது. அந்தச் சிசு விடுதியின் முற்றத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

சிசு புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிவானின் உத்தரவைப் பெற்று அதனை மீட்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 Reviews

Write a Review

Read Previous

வடக்கில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை: தேவையற்ற அச்சம் வேண்டாம்!- பணிப்பாளர் சத்தியமூர்த்தி

Read Next

ஊரடங்கால் இப்படியும் விபரீதம்: 70 இலட்சம் ‘திடீர்’ கர்ப்பங்கள் உருவாகலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?