வடமாகாணத்தில் தற்காலிக இணைப்பு பெற்றவர்களிற்கு மேலும் 2 மாத அவகாசம்!

வடமாகாணத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களில் தற்காலிக இணைப்புக்களை பெற்று வேறு இடங்களில் பணியாற்றுபவர்கள் அதே இடங்களில் இரண்டு மாதங்கள் பணியாற்ற முடியும் என்று வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் வன்னிப்பகுதியில் பணியாற்றிய நிலையில் பல்வேறு காரணங்களிற்காக தற்காலிக இணைப்பை பெற்ற நிலையில் இணைப்புக்காலம் முடிவடைந்தவர்கள், விடுமுறை பெற்றவர்களின் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தியபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் பலர் தற்காலிகமாக பிரசவ காலம், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளிற்காக பிறமாவட்டங்களில் இணைப்பு பெற்ற நிலையில், அந்த கால எல்லை முடிவடையும் பட்சத்தில் மேலும் 2 மாதம் அனைத்து ஆசிரியர்கள், உத்தியோகத்தர்களுக்கும் காலம் நீடிக்கப்படுகிறது. இதனால் தற்போது பணியாற்றிய பாடசாலைகளிலேயே ஒப்பமிட முடியும்.

அதேநேரம் சம்பளமற்ற விடுமுறையை பெற்று வெளிநாடுகளிற்கு சென்றவர்கள், பணிக்கு திரும்ப முடியாத நிலையில் பதற்றமடைய தேவையில்லை. அவர்களிற்கும் மேலும் 2 மாதம் சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் என்றார்.

0 Reviews

Write a Review

Read Previous

விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி

Read Next

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?