பாடசாலைகள் திறக்கப்படும் தினம் குறித்து வெளியான புதிய தகவல்

இலங்கையில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் பின்னர் வெளியிடப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவிப்புகளில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் அரசாங்கம் வகுத்துள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை மாத்திரம் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

தரம், 10, 11 மற்றும் தரம் 12, 13 ஆகிய வகுப்புகள் மாத்திரம் ஆரம்பிக்கப்படலாம் எனவும் ஏனைய வகுப்புகளை தாமதித்து ஆரம்பிக்கலாம் எனவும் தெரியவருகிறது.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த உறுதியான தகவல்கள் இந்த வாரம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 Reviews

Write a Review

Read Previous

கேப்பாப்புலவில் நீடிக்கிறது பதற்ற நிலை. தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மேலும் இருவர் இன்று உயிரிழப்பு! (காணொளி)

Read Next

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?