சீனாவில் எப்படி வைரஸை கட்டுப்படுத்தினார்கள் தெரியுமா? சுதேச மருத்துவத்திற்கு இவ்வளவு மகத்துவமா ? (காணொளி)

விளக்குகிறார் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் மருத்துவர் திருமதி இராஜராஜேஸ்வரி சிறிதர்.

அபாயகரமான வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுதேச மருத்துவத்திற்கு உண்டு.
கிழக்குமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில்  இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மூன்று மருந்து உற்பத்தி நிலையங்களில் தயார் செய்யப்படும் மருந்துகள் பிரதேச செயலக மட்டத்திலும் வைத்தியசாலைகள் ஊடாகவும் இலவசமாக வழங்கப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அடங்கலாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் 2500 க்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பொதிகளை வழங்கி வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்குமாறு கோரிக்கை விடுத்த அவர். கொரோனா நோயைத் தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதனை தடுக்கும் முகமாக ஆயுர்வேத திணைக்களம் பாரிய முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருவதாகவும் அதில் ஒரு கட்டமாக. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான மருந்து வகைகளை விநியோகம் செய்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
குறிப்பாக உலக நாடுகள் ஆங்கில மருந்துகளுடன் சித்த ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்தி கோவிட் தொற்றின் காரணமாக இறப்பவர்களின் விகிதத்தினை கட்டுப்படுத்த பல முயட்சிகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்
குறிப்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இவை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்
இரு வகை குடி நீர்களும் சுவாச சுத்திகரிப்பிற்காக ஆவிபிடித்தலுக்கான ஒரு சூரணம் மற்றும் வீடுகளில் தொற்று நீக்குவதற்கான சாம்பிறாணி ஒன்றினையும் தாம் இலவசமாக வழங்கிவருவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த மருந்துகளை இலவசமாக பெறக்கூடிய தொடர்பிலக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Write a Review

Read Previous

அமெரிக்க சிலோன் மிசனின் நவாலி இடுகாட்டில் நினைவு கற்கள் விசமிகளால் சேதம்

Read Next

52 ஆயிரம் பேரில் முதற்கட்டமாக 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?