கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு – காணொளி

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 06 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 06வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் தந்தை, தாய் மற்றும் சகோதரன், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் என நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துவருவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Write a Review

Read Previous

கொவிட்-19 சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!

Read Next

யாழ். சிறைச்சாலையில் இருந்து தப்பியோட்டிய கைதி மீண்டும் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?