மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள குருக்கள்மடம் வெள்ளக்கட்டுப் பகுதியில் விவசாய பயிருக்கு தண்ணீர் இறைக்கும் மோட்டருக்கு எடுக்கப்பட் மின்சார வயரின் மின்னெழுக்கினால்   மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர்  உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

செட்டிபாளையத்தைச் சேர்ந்த 60 வயதையுடைய விவசாயியான  செம்பாப்போடி தேசிய சிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விவசாயி குருக்கள்மடம் வெள்ளக்கட்டுப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் பயிர் செய்கைக்கு தண்ணீர் பாச்சுவதற்காக மின் கம்பத்தில் இருந்து திருட்டு மின்சாரம் பெற்று மோட்டர் மூலமாக தண்ணீர் இறைத்து வந்துள்ளார்

இந்த நிலையில்  சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை மாலை விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மன்கம்பத்தில் இருந்து மோட்ருக்குச் செல்லும் மின்சார வயர் மின்னொழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Reviews

Write a Review

Read Previous

நிறை குறைவான பேக்கரி பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?